தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நீபா. சினிமா மட்டுமல்லாது சின்னத்திரையிலும் இவர் கவர்ச்சி வேடங்களிலேயே நடித்து வந்தார்.

நீபா சமீபத்தில் கவர்ச்சியாக நடித்ததற்கு அவர் கூறிய கருத்து தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவலன் திரைப்படத்தில் வடிவேலு ஜோடியாக நீபா நடித்திருந்தார்.

பூங்கொடி என்ற கதாபாத்திரம் நகைச்சுவையுடன் வந்ததால் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. இந்நிலையில் நீபா தான் கவர்ச்சியாக நடிப்பதற்கு தந்தையின் உடல் நிலை தான் காரணம் எனவும் கூறி வருத்தப்பட்டுள்ளார்.

மேலும் சினிமாவில் கவர்ச்சியாக நடிப்பவர்களை பொதுவாகவே தவறாக பேசுகிறார்கள் எனவும், கவர்ச்சியாக நடிப்பதால் ஈசியாக அவர்களை தவறாக உபயோகப்படுத்தலாம் எனவும் சிலர் எண்ணுகின்றனர்.

அது முற்றிலும் தவறு. உடம்பை காட்டுகிறவர்கள் கெட்டவர்கள் இல்லை, அதேபோல் முழுவதும் மூடிக் கொண்டாலும் நல்லவர்கள் இல்லை என்பதை உணர வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டுள்ளார்.

எடுத்துக்காட்டாக நடிகை மும்தாஜ் சினிமாவில் கிளாமராக நடித்து இருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரது உடை மதிக்கத் தக்கதாகவே இருந்தது.

ஆகையால் கவர்ச்சி நடிகைகளில் யாரும் விருப்பப்பட்டு கவர்ச்சி காட்டுவது இல்லை எனவும், குடும்ப சூழ்நிலை காரணமாக அதை ஏற்று நடிக்க வேண்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு காலடி எடுத்து வைத்தவர்களில் குறிப்பிட்ட சிலரால் மட்டுமே ஜொலிக்க முடிகிறது.

அந்த வரிசையில் நடிகை நீபாவும் ஒருவர். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது நடன திறமையால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கவியாஞ்சலி என்ற சீரியல் மூலமாக சின்னத்திரை நாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.

2013ம் ஆண்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன நீபாவுக்கு, அழகான பெண் குழந்தை உள்ளது. தற்போது மீண்டும் சீரியல், ரியாலிட்டி ஷோ என கலக்க ஆரம்பித்துள்ள நீபா கலக்கல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு rரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.