கமலுடன் விஸ்வரூபம் 2ம் பாகத்திலும் தனுஷ் உடன் வடசென்னை படத்திலும் நடித்தார். இந்த ஆண்டில் அவர், மாஸ்டர் என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

மாறுபட்ட கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கும் ஆண்ட்ரியா கவர்ச்சியாகவும் நடிக்கிறார். ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, இது நம்ம ஆள போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார்.

சமீபத்தில், திருமணமான நடிகர் ஒருவருடன் தான் சில காலம் உறவில் இருந்ததாகவும் அவர் தன்னை சீரழித்து ஒழித்துவிட்டதாகவும் பெயரைக் குறிப்பிடாமல் குறிப்பிட்டிருந்தார்.

அத்தோடு விடாத அவர் அந்த நபரால் தான் மிகவும் நோய்வாய்ப்பட்டதாகவும் அதிலிருந்து மீண்டுவர சில நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு ஆயுர்வேத சிகிச்சை பெற்று கொண்டதாகவும் இதுகுறித்தெல்லாம் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுதி வரும் ஒரு புத்தகத்தில் தைரியமாக குறிப்பிட்டு இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

மக்கள் சும்மா இருப்பார்களா? அந்த நபர் யார் என்று தொடர்ந்து நச்சரிக்கவே, அதுகுறித்த முழுமையான தகவலை தான் ’புரோகன் விங்ஸ்’ புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதாகவும், தங்களுக்குள் நடந்த அனைத்தும் தகவல்களும் அதில் இடம்பெறும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இது ஒருபக்கம் இருக்க, தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா, தற்போது முரட்டுத்தனமான அவரது தோற்றத்துக்கு ஏற்ப கவர்ச்சி உடையில் தன்னுடைய தொடையழகு பளீச்சென தெரிவது போல் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.