2007ல் ஜீவா நடித்த கற்றது தமிழ் படத்தில் அறிமுகமானவர் அஞ்சலி. அதையடுத்து சுந்தர்.சியுடன் ஆயுதம் செய்வோம் படத்தில் நடித்த அவருக்கு வசந்தபாலனின் அங்காடித்தெரு படம் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு தொடர்ச்சியாக குடும்ப கதைகளாக நடித்த அஞ்சலிக்கு அந்த படங்கள் கைகொடுக்கவில்லை.

அதனால் மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்வதற்காக சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு படத்தில் அயிட்டம் நடிகை போன்று களமிறங்கினார். அவர் இடுப்பை நொடித்து ஆடியதைப்பார்த்து, குடும்ப குத்து விளக்கு அஞ்சலியா இப்படி கவர்ச்சி குத்து விளக்காகி விட்டார் என்று அனைவருமே அசந்து நின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் தமிழுக்கு ரீ-என்ட்ரியானபோதும் அப்பாடக்கர் படத்தில் கிராமத்து பெண் வேடத்தில்தான் கமிட்டானார். ஆனால் இப்போது ஜெயம்ரவியுடன் அவர் இடம்பெற்ற டூயட் பாடலை தாய்லாந்தில் படமாக்கியவர்கள், மீண்டு அஞ்சலியை கவர்ச்சி புயலாக்கி படமாக்கியிருக்கிறார்கள்.

இதையடுத்து, மறுபடியும் தனது கவர்ச்சி பிரவேசம் ஸ்டார்ட் ஆகிறது என்று அறிவித்துள்ள அஞ்சலி, புதிய படங்களில் முன்னணி நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், அதிரடி கிளாமருக்கு தயாராகி விட்டதாக கமர்சியல் டைரக்டர்களுக்கு போன் போட்டு காது கடித்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க கொரோனா ஊரடங்கள் வீட்டில் முடங்கி கிடக்கும் அஞ்சலி, இந்த கொரோனா பிரச்சனை மட்டும் முடிந்து விட்டால் இப்படிதான் கொண்டாடுவேன் என்று கார் பார்க்கிங்கில் ஒரு காலை மட்டும் தூக்கியபடி போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.