விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலில் கடைசியாக நடித்திருந்தார். பல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருமுகமாக இருக்கிறார்.

சமீபத்தில் கர்ப்பமான ஸ்ரீதேவி அசோக்ர் சீரியலில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில், இவருக்கு சமீபத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது தன்னுடைய குழந்தையுடன் தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படங்களை சமீபகாலமாக தன்னுடைய இணைய பக்கங்களில் பகிர்ந்து வந்தார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேளிக்கையாக வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் இவர் தற்பொழுது கந்தசாமி திரைப்படத்தில் இடம்பெற்ற என் பேரு மீனா குமாரி என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு உள்ள ஒரு வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் “குத்துற குத்து, ரெண்டு கண்ணு பத்தல..” என கமெண்டில் வர்ணித்து வருகிறார்கள்.