தமிழகத்தில் குழந்தையை ஈன்ற இளம் தாய் மரணமடைந்ததால் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள காந்தல் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது25). எலெக்ட்ரீசியன். இவருடைய மனைவி மாயா (20).

இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் மாயாவுக்கு நேற்று முன்தினம் காலை பிரசவ வலி ஏற்பட்டது.

உடனடியாக மாயாவை குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் நள்ளிரவில் திடீரென மாயா ம ர ண ம டைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் உறவினர்கள் கலங்கி போயினர்.

தன்னுடைய மனைவியின் ம ர ணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது கணவர் மோகன்ராஜ், ஊட்டி நகர மத்திய பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன்படி மருத்துவமனைக்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தியதுடன் மாயாவின் உ டலை கைப்பற்றி பி ரே த பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போராட்டம் நடத்திய உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பொலிசார் முறையான விசாரணை நடத்தப்படும் எனவும் உறுதியளித்தனர்.