பிரபல டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் மக்களிடையே அதிகமாக பிரபலமானவர் தான் நடிகை ஷிவானி.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். அதிலும் மாலை 4 மணி 5 மணி என்று குறிப்பிட்ட சமயத்தில் இவர் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

இதனாலேயே இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்வோர் எண்ணிக்கை அதிகரித்து. இவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற போதும் இவரது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் பதிவிடுவதையும் வழக்கமாக வெளிவர வேண்டும் என்று முன்பே புகைப்படங்களை எடுத்து வைத்துச் சென்றுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாலாஜிக்கும் கேப்ரில்லாவிற்கும் இடையே ரொமான்ஸ் செல்வது போல பிக்பாஸில் சில நிகழ்வுகள் வந்த நிலையில், ஆனால் பாலாஜி கேபியை தங்கச்சி என்று கூறியுள்ளார்.

அதேபோல கடந்த சில தினங்களாக பாலாஜி மற்றும் ஷிவானிக்கு இடையே ஒரு வகையான கெமிஸ்ட்ரி சென்று கொண்டு இருக்கிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ஒரு டாஸ்க் முடிந்த பின்பும் ஷிவானி, பாலாஜிக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தார்.

இப்படியொரு நிலையில் கேமராவிற்கு பின்னால் கூட பாலாஜி மற்றும் ஷிவானிக்கு ஒரு வகையான கெமிஸ்ட்ரி ஓடிக்கொண்டு தான் இருக்கிறது என்று நெட்டிசன்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.