கொய்யா இலையில் பல்வேறான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. தினமும் கொய்யா இலையில் டீ போட்டு குடித்து வந்தால் அவை வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. அதுமட்டுமின்றி அழற்சியை குணப்படுத்துகிறது.
அதுமட்டுமின்றி வாய்ப்புண், மற்றும் தொண்டையில் புண் உள்ளவர்கள் கொய்யா இலையை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தாலோ அல்லது கொய்யா இலையில் டீ போட்டு குடித்து வருவதால் புண்கள் விரைவில் குணமாகும். மேலும் பல்வலி மற்றும் ஈறு பிரச்சனைகள் போன்றவற்றை குணப்படுத்துகிறது.
கொய்யா இலையில் டீ போட்டு குடிப்பதால் உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளை இவை குறைத்து நல்ல கொழுப்புகளை பராமரித்து கல்லீரலுக்கு இவை சிறந்த டானிக்காக பயன்படுகிறது. மேலும் இதில் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல் மற்றும் இதயம் சம்மந்தமான நோய்களுக்கு நல்ல பலனை அளிக்கிறது.
மேலும் பெண்கள் மாதவிடாய் காலத்தின் போது கொய்யா இலையின் கஷாயம் செய்து தொடர்ந்து குடித்து வந்தால் வயிற்று வலி குணமாகும். கொய்யா இலையுடன் சிறிதளவு அரிசி மாவு சேர்த்து அதில் 2 டம்ளர் தண்ணீரில் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு பிரச்சனைகளை சரிசெய்யும்.
அதுமட்டுமின்றி கொய்யா இலையை வெயிலில் காயவைத்தோ அல்லது பச்சையாகவோ நீரில் போட்டு கொதிக்க வைத்து இதில் டீ போட்டு 12 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நம் உடலில் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது.
ஒன்றரை லிட்டர் தண்ணீரில் கொய்யா இலையை போட்டு நன்கு காய்ச்சி அதை தினமும் மூன்று முறை குடித்து வருவதால் வயிற்று வலி குணமாகும். மேலும் கொய்யா இலையின் சாறில் சிறிது தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் நம் உடல் உடல் எடை குறையும்.