கொரோனாவிலிருந்து மீண்ட ஐஸ்வர்யா ராய்!... வெளியிட்ட உருக்கமான பதிவு- என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் தன்னுடைய ரசிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் நன்றி சொல்லி இன்ஸ்டாவில் புதிய பதிவொன்றை எழுதியுள்ளார்.

அதில், என் மீதும், அமிதாப் அப்பா, அபிஷேக் மற்றும் என்னுடைய தேவதை ஆராத்யாவுக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

என்றென்றும் கடன்பட்டிருக்கிறேன், உங்கள் அனைவரையும் கடவுள் ஆசிர்வதிப்பார், உங்கள் மீது என்னுடைய அன்பு இருக்கும்.

உங்கள் அனைவரின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்கின்றேன், கடவுள் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக, லவ் யூ ஆல் என தெரிவித்துள்ளார்.