2007ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த பொய் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை விமலா ராமன். இதனைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து திரையுலகில் பிரபலம் அடைந்தார்.
இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், தமிழ் உட்பட மொழித் திரைப்படங்களில் நடித்து அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.
இவ்வாறு அனைத்து மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வந்த இவர் சிறிது காலம் கழித்து காணாமல் போய்விட்டார். தற்பொழுது அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் இணையதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
இவர் பரதநாட்டியத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அந்த வகையில் தற்போது மிகவும் ஆக்ரோஷமாக பரதநாட்டியம் ஆடும் படி அழகான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சத்தியம் பண்ணி சொல்லுங்க உங்களுக்கு 40 வயது ஆகிறதா பாத்தா அப்படி தெரியலையே என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.