மலையாள சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் பாவனா. தமிழில் சில படங்களில் நடித்தாலும் அதிகமான வாய்ப்பு கிடைப்பது மலையாளம் மற்றும் கன்னடத்தில்தான்.

அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய சோகத்திற்கு பிறகு அவர் மீண்டெழுந்து, திருமணமும் செய்து கொண்டு நடிக்க தொடங்கியிருக்கிறார்.

கன்னடத்தில் கடைசியாக 96 படத்தில் நடித்தார். இது தமிழ் 96 படத்தின் ரீமேக்தான். இதில் த்ரிஷா கேரக்டரில் அவர் நடித்திருந்தார். தற்போது கன்னடத்தில் இன்ஸ்பெக்டர் விக்ரம், பஞ்சராங்கி 2, கோவிந்தா கோவிந்தா படங்களில் நடித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படங்கள் வெளிவராமல் இருக்கிறது.இந்த நிலையில் ஸ்ரீகிருஷ்ணாஅட்ஜீமெயில்.காம் என்ற காமெடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இதில் அவர் கிருஷ்ணா ஜோடியாக நடிக்கிறார். வழக்கறிஞர் வேடம். திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டூ கெதராக வாழும் ஒரு தம்பதிகள் இடையே எழும் பிர்சசினைகளை காமெடியாக சொல்கிற படம். கொரோன ஊரடங்கிற்கு பிறகு படப்பிடிபப்புகள் தொடங்குகிறது.

இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அணைத்து மொழி சினிமா துறையிலும் நடித்துள்ளார்.மேலும் இவர் கன்னடா மொழி சினிமா துறையில் அதிகபடியான படங்கள் தற்போது நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை பாவனா அவர்கள் தற்போது சமுக வலைத்தளங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.

அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறார்.இந்நிலையில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கொள்ளை அழகுடன் இருக்கிறார் என கமெண்ட் களை பதிவிட்டு வருகிறார்கள்.