நடிகை வித்யுலேகா ராமன் கொரோனா லாக்டவுனில் தனது உடல் எடையைக் குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.
வித்யுலேகா நீதானே என் பொன்வசந்தம் படத்தில் சமந்தாவின் தோழியாக நடித்திருந்தவர் .
நடிகர் மோகன்ராமின் மகளான இவர் வீரம், வேதாளம், பவர் பாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக அதிக தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் வித்யுலேகா தான் உடல் எடையைக் குறைத்த அனுபவம் குறித்து அன்றும், இன்றும் புகைப்படத்துடன் விளக்கியுள்ளார்.
வித்யுலேகா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், வாரத்துக்கு 6 முறை உடற்பயிற்சி, சரியான சாப்பாடு இருக்க வேண்டும்.
எந்த ரகசிய மருந்துகளும் கிடையாது. கடின உழைப்பு மட்டுமே. வாழ்க்கையில் எதுவுமே எளிதில் கிடைத்து விடாது. ஆனால் பலனைப் பார்க்கும் போது நம்முடைய உழைப்பு எல்லாவற்றுக்கும் மதிப்பு உள்ளது என்பது புரியும்” என்று கூறியுள்ளார்.
மேலும் தன்னம்பிக்கை குறித்தும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வித்யுலேகா பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.