உ லகையே ஆ ட்டிப்படைக்கும் கொரோனா மூ ச்சுக்கா ற்று மற்றும் தொ டுதலினால் ப ரவுவதாக அ றியப்பட்டுள்ளது.
இந்த நோ யை க ட்டுப்படுத்த ம ருந்துகள் தயாரிக்கப்பட்டுக் கொண்டு வரும் நி லையில், மருந்துகள் வரும் வரையில் அனைவரும் நம்பி இருக்கும் த டுப்பு வ ழிமுறைகளாக, த னிம னித இடைவெளி, சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல், வீ ட்டுக்குள்ளேயே மு டங்கி இருத்தல், த னித்திருத்தல், சா னிட்டைஸர் ப யன்படுத்துதல், கைகளை சு த்தமாக க ழுவுதல் உள்ளிட்டவையே இப் போ தைக்கு க ண்மு ன் இருக்கின்றன.
இந்நிலையில் திருச்சி சமயபுரம் அருகே உள்ள கீழக்கல்லுக்குடியில் சாய்பாபா கோவில் நிர்வாகிகள் சிலர், கோதுமை மாவை திரித்து, கொ ரோனாவைத் தடுக்கும் விதமாக சாலைகளில் பாதுகாப்புக் கோ டுகளை போட்டுள்ளனர்.
இதுபற்றி பேசிய இவர்கள், 110 ஆண்டுகளுக்கு முன்னர் சாய்பாபா இருந்த ஊரில், அவர் இதேபோன்று கோதுமை மாவை திரித்து கோடு போட்டதால் கா லரா ஒ ழிந்ததாக, ஒரு புத்தகத்தில் படித்ததாகவும் அதனால் தாங்கள் அதையே பின் தொடர்ந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.