விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பகல் நிலவு என்ற சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. சரவணன் மீனாட்சி தொடருக்கு பின்னர் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டது இந்த சீரியல் தான் என்று கூட சொல்லலாம்.
பகல் நிலவு தொடர் முடிந்த நிலையில், அசீம் – ஷிவானி ஆகியோரை வைத்து ‘கடைக்குட்டி சிங்கம்’ தொடர் தொடங்கப்பட்டது. ஆனால் பகல் நிலவு தொடரில் ஜோடிகளை சேனல் அழுத்தம் கொடுத்து வெளியேற்றப்பட்டனர். அதோடு ஷிவானியை வேண்டா வெறுப்பாக நடிக்க வச்சதாலேயே, என்ன பிரச்னையோ சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே வெளியேறிட்டாங்க என்று கூறியுள்ளனர்.