தமிழ் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்று மக்களின் மனதை கவர்ந்தவர்கள் பலர் உள்ளனர்.அந்த வகையில் பெரிய திரையில் வராவிட்டாலும் மக்களிடையே நல்ல மதிப்பை பெற்று இருப்பவர் தான் கலாக்கப்போவது யாரு புகழ் சரத் ராஜ்.

தனது தனித்துவமான நடிப்பாலும் காமெடி திறனாலும் மக்கள் மத்தியில் ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உடையவர் சரத்ராஜ்.குறிப்பாக கலக்கப்போவது யாரது நிகழ்ச்சியில் இவர் செய்த பல நிகழ்ச்சிகள் இன்றும் பிரபலம்.

குறிப்பாக மொட்டை ராஜேந்திரன்கெட்டப்பில் இவர் வந்து நின்று வசனங்கள் பேசினால் அரங்கமே அதிரும் என்று சொல்லலாம் அந்த அளவிற்கு தனது திறமையால் மக்களை தன்வசம் இழுத்தவர்.

இந்நிலையில் தற்போது சில சிறிய படங்களில் கமிட்டாகி உள்ள இவருக்கு அண்மையில் திருமணம் நடந்துள்ளது.