தற்போது நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கமானது அதிகமாகிக்கொண்டே இருக்கிறது இந்நிலையில் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் ஆண்டுதோறும் கொண்டாடும் ஓணம் பண்டிகையை மக்கள் தற்போது உற்சாகத்துடன் தனது வீட்டிலேயே கொண்டாடி வருகிறார்கள்.
இதை தொடர்ந்து வீட்டிலேயே மிகவும் அழகு அழகான ரங்கோலி கோலம் போட்டு அகல் விளக்குகளையும் ஏற்றி பல்வேறு உணவுகளை விருந்தாக படைத்து மலையாள மக்கள் மிக பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறார்கள்.
இந்த ஓணம் பண்டிகை மலையாள மக்கள் மட்டுமின்றி மற்ற மாநிலத்தவரும் கொண்டாடுவது வழக்கம் தான். ஓணம் பண்டிகை என்று வந்துவிட்டாலே பெண்கள் விரும்பி அணிவது கேரளா சேலைதன். இவ்வாறு அந்த சேலையை பல வர்ண முறையில் அணிந்து புகைப் படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
அந்த வகையில் பிரபலங்களும் ஓணம் பண்டிகையை கொண்டாடும் வகையில் புது வண்ண முறையில் ஆடையை அணிந்து சமூக வலைத்தளத்தில் புகைப்படம், நடனம் என அசத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சின்னத்திரை நடிகை சிவானியும் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இவர் சின்னத்திரையில் பகல் நிலவு என்ற சீரியலில் மூலம் அறிமுகமானவர் இதை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் சீரியலிலும் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இவ்வாறு நடித்த இந்த சீரியலில் பாதியிலேயே விலகிய சிவானி தற்போது இரட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இவ்வாறு இந்த சீரியலில் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கும் சிவானி ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார். இவ்வாறு சீரியலில் நடிக்கும் நமது நடிகைக்கு வெறும் பத்தொன்பது வயது தான் ஆகிறதாம்.
இந்நிலையில் சிவானி தற்போது ஓணம் புடவையை அணிந்து கொண்டு ஒரு பாடலுக்கு நடனமாடும் காட்சி தனது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. மேலும் இதைப் பார்த்த ரசிகர்கள் கொடைக்கல்லில் எப்படி மாவு ஆட்டுராங்க பார்த்தீங்களா என கலாய்த்து வருகிறார்கள்.