தனது ஆரம்பகாலத்தில் சினிமா நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் சீரியலில் நடிக்க வந்தவர்கள் பல பேர் இருக்கிறார்கள். இந்த பட்டியலில் நடிகை ஸ்வேதா பண்டேகரும் அடங்குவார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், ’சந்திரலேகா’ என்ற தொடரில் சந்திரா என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான். இவர் 2007 -ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ’ஆழ்வார்’ திரைப்படத்தில் அவரின் தங்கையாக நடித்திருந்தார் ஸ்வேதா.

முதல் படமே அஜித் படம் என்பதால், அடுத்த படத்திலேயே இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எந்த படமும் எதிர் பார்த்த வெற்றியை தராததால், அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதமானது.

இதனால் கிடைத்த வாய்ப்புகளை நிராகரிக்காமல், துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் ஸ்வேதா. இதுவரை 9 திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்வேதா, இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘பூலோகம்’ படத்திலும் நடித்திருந்தார்.

அதன் பின் சீரியல்கள், பிரபல சோப், நெய் விளம்பரங்களிலும் நடித்துள்ளார். சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் இவர் இணையத்தில் கவர்ச்சி குயினாக வலம் வருகிறார்.

error: Content is protected !!