தொலைக்காட்சி விளம்பரங்களில் நிமிடத்துக்கு நிமிடம் கலர்ஃபுல் ஆடையில், கவர்ந்திழுக்கும் பெண்களுடன் கலக்கல் நடனம் ஆடி ஸ்டார் ஆகி விட்டார் சரவணா ஸ்டோர் அருள். அதை விட இப்போது ஹாட் டாபிக் ஆகி இருக்கிறது திருநெல்வேலியில் அவரது சின்ன வீடு. முன்பெல்லாம் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடிகைகள் நடித்து வந்தனர். ஆனால் சமீபகாலமாக இந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்தின் தலைவர் சரவணனே நடிக்கத் தொடங்கினார். சரவணனுக்கு ஜோடியாக ஹன்சிகா, தமன்னா உள்ளிட்ட நடிகைகளும் நடித்தனர்.

ஆரம்பத்தில் சரவணன் நடித்த விளம்பரங்களுக்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களும் மீம்ஸ்களும் குவிந்தன. ஆனால் அவர் தனது முடிவிலிருந்து பின் வாங்காமல் தொடர்ந்து நடித்து வந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க விழாவிலும் முன்னணி நடிகர்களுடன் சரவணன் கலந்துகொண்டார். இதன்மூலம் அவருக்கு சினிமா ஆசை இருக்கிறது என்று பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது அவர் நாயகனாக நடிக்க முடிவெடுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக அவர் கதை கேட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறாராம்.

இந்த நிலையில் தனது சொந்த ஊரான திருநெல்வேலி புறநகர் பகுதியில் பிரம்மாண்டமாய் சின்ன வீடு ஒன்றை கட்டி கிரஹப்பிரவேசம் செய்துள்ளார் அருள். ’லெஜெண்ட் சரவணன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த மாளிகையில் அத்தனை வசதிகளும் உள்ளன. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்கும் வகையில் மூன்றடுக்கு மாளிகையில் சமையல் அறையே ஆயிரம் கன சதுரடிக்கு மேல் அமைக்கப்பட்டுள்ளது. உணவருந்தும் அறையில் ஒரே நேரத்தில் ஐம்பதுக்கும் மேலானவர்கள் சாப்பிடும் வகையில் பிரம்மாண்ட டேபிள் விலை உயர்ந்த சேர்கள் போடப்பட்டுள்ளன.

இந்த வீட்டை பார்த்து உள்ளூர்வாசிகள் வாயடைத்துப்போய் கிடக்கிறார்கள். சென்னையில் வசிக்கும் அருள், எப்போதாவது தனது சொந்த ஊரான நெல்லைக்கு சென்றால் இங்கு ஓரிரு நாட்கள் தங்கி ஓய்வெடுக்க இந்த ‘சின்ன வீட்டை’ பிரம்மாண்டமாய் கட்டியுள்ளார். பின் குறிப்பு: அருள் அண்ணாச்சி நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு நெல்லை பகுதில் நடைபெற இருப்பதாக தகவல். ஆகையால் அவரது இந்த புதிய வீட்டில் ஷூட்டிங் நடத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.இரட்டை இயக்குநர்களான ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். இதனால் தமன்னா, ஹம்சிகா மோத்வானி, சினேகா, ஸ்ரேயா என பல ஹீரோயின்கள் வயிற்றெரிச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது.

சினிமா நடிகர்களை போல பிரம்மாண்ட மான வீட்டை அவர் போன வருடம் கட்டியிருந்தார். அனால் இப்போழுது கூடியரவில்லை என்றும் அவர்களின் செந்தகங்களும் மற்றும் வேலை பணியாட்களும் தங்கியிருப்பதாக தாகல் கிடைத்தது. இவாரின் அடுத்த ஆசை  திரைபடத்தில் நாயகனக நடிக்கவிருக்கிறார் இதற்க்கு நடிகை நயன் தாராவிடமே கல்ஷிட் காத்துயிருக்கிறார். இவரின் விளம்பர படங்களை இயக்கியவர் ஐே.டி.ஐெர்ரி இயக்கயிருக்கிறார்.

அண்ணாச்சி  நடிக்கும் புதிய திரைப்படத்தில் நயன்தாரா நடிப்பார் என எதிர் பார்க்கப்படுகிறது