சமூக வலைதளங்கள் சிலரின் வாழ்க்கையை உயர்த்திவிடுகிறது. பாமர ஜனங்களின் திறமைகளையும் பலரும் அங்கீகரிக்கும் களாமாக அமைந்து வருவது பெருகியுள்ளது.

குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து வருகிறது. அண்மையில் வயதான பாட்டி ஒருவர் சாலையில் நின்று சிலம்பம் சுற்றி பலரையும் கவர்ந்தார். ஆனால் வயிற்றுப்பிழைப்பிற்காக சிரமப்படுவது பலருக்கும் மிகுந்த வேதனையளித்தது.

இது சினிமா பிரபலங்களின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் பிரபல நடிகர் சோனு சூட் இந்த மூதாட்டியின் தகவல்கள் எனக்கு வேண்டும், இவரை கொண்டு தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்கும் பள்ளிக்கூடத்தை திறக்கப்போகிறேன் என கூறியுள்ளார்.

அதே போல நடிகை ஜெனிலியாவின் கணவரும் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் இந்த மூதாட்டியிடம் பேசியுள்ளார். அவருக்கு உதவி செய்ய பாலிவுட் நடிகர்கள் முன்வந்துள்ளதால் இனி சாலையில் நின்று உதவி கேட்கும் நிலை ஏற்படாது என சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

ரித்தேஷ் தேஷ்முக் பகிர்ந்துள்ள இந்த வீடியோவை 3.4 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.