டான்ஸ் மாஸ்டர் சாண்டி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. சாண்டி மாஸ்டர் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடன அமைப்பாளராக இருந்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாடியும் மீசையுமாக புகை பிடித்தவாறு புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை மிரட்டியிருந்தார். தற்போது அவரின் மனைவியுடன் ஜோடியாக சேர்ந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

அதில், வாழ்வில் எனது பக்கபலமாக இருந்து, இன்பத்திலும் துன்பத்திலும் சரிசமமாகப் பங்கெடுத்துக் கொண்டு என்னை வழி நடத்துபவள் என் கண்ணம்மா என்றும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தற்போது இன்ப அதிர்ச்சியுள்ளனர்.

சாண்டியின் மனைவி நடிகைகளையும் மிஞ்சி விடும் அளவு மாஸாக உள்ளார்.

You missed