திருமண நிகழ்ச்சியின் போது மாப்பிள்ளை பின் நிற்கும் உறவினர் சீண்டிய நிலையில், பொங்கி எழுந்து மாப்பிள்ளை அடித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்றைய காலக்கட்டத்தில், திருமண நிகழ்வின் போது பல சுவாரஷியமான சம்பவங்கள் நடந்துகொண்டு வீடியோவாகவும் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்க்கிறது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் இதுபோன்ற பல வீடியோக்கள் வைரலாக பரவி வரும் நிலையில், தற்போது, வட மாநிலம் ஒன்றில் நடந்த திருமண வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

திருமண மேடையில் மணப்பெண் உடன் மாப்பிள்ளை அமர்ந்திருக்க, பின்னால் நிற்கும் உறவினர் மாப்பிள்ளையை அடிக்கடி சீண்டிக்கொண்டே இருக்கிறார்.

தொல்லைகளை பொறுத்துக்கொண்ட மாப்பிள்ளை ஒரு கட்டத்தில், அவரை எழுந்து தாக்குகிறார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.