சீரியல் நடிகை நேகா கவுடா சின்னத்திரைக்கு ஒன்றும் புதிதானவர் அல்ல. அதற்கு முன்பு கல்யாண பரிசு என்ற சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு அவருக்கு வெயிட்டான ரோல் கிடைக்கலை. இந்த நிலையில்தான் “ரோஜா” சீரியலில் இவர் தலை காட்டப்போகிறார்.

ஆனால் என்ன கேரக்டர் என்று ரசிகர்கள் தெரியாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள்.கல்யாணப்பரிசு சீரியலில் காயத்ரி என்ற கேரக்டரில் நடித்து வந்தார் நேகா கவுடா. இவர் பெங்களூரு பொண்ணு. அதனால் தான் என்னவோ சும்மா தள தளவென தக்காளி போல அம்சமாக இருக்கிறார் அம்மணி.

இவருடைய தந்தை கன்னட சினிமாவில் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார். இதுபோக நடிகர் கமலஹாசனின் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆகவும் வேலை செய்துள்ளார். இவருக்கு சிறு வயது முதலே நடனம் மிகவும் பிடிக்குமாம்.

இதனால், முறைப்படி வெஸ்டன் நடனம் கற்றுள்ளார். பத்தாம் வகுப்பு படிக்கும்போது தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் இருந்திருக்கிறார். படித்து முடித்த பிறகுதான் சினிமாவில் நுழைய வேண்டும் என அவரது வீட்டில் கறாராக சொல்லி விட்டார்களாம்.

அதனால் பிகாம் முடிச்ச பிறகுதான் நடிக்க ஆரம்பித்தாராம். 2013ல் முதலில் கன்னட சீரியலில் அறிமுகமாகியிருக்கிறார். அதற்கு பிறகுதான் கல்யாண பரிசு சீரியல் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தருகிறது. ஆரம்பத்தில் அவருக்கு நடிப்பதற்கு கொஞ்சம் பயமாத்தான் இருந்ததாம்.

நேகாவுக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் கூட தமிழ் பேச தெரியாது. இருந்தாலும் கல்யாணப்பரிசு சீரியல் டீம் இவருக்கு நல்ல முறையில் ஒத்துழைத்ததன் மூலம் அந்த சீரியல் தனக்கென்று ஒரு ரசிகர் வட்டாரத்தை பெற்றிருக்கிறார். இந்த சீரியல் ஒரு முக்கோணக் காதலை மையமாகக் கொண்டது.

இவர் நடித்திருப்பது ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துள்ளது. சரி, நேகாவைப் பற்றிய ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டோமே. அவருடைய கீழுதட்டுக்குக் கீழே இருக்கிற மச்சம்தான் அவரோட அழகின் ரகசியம். நிறையப் பேர் அதைச் சொல்லிசொல்லி தான் அவரை புகழ்வார்களாம்.

அதனால், தன்னுடைய மச்சத்தின் அழகு மீது நேகாவுக்கே ஒரு தனி பெருமையும் கர்வமும் உண்டாம். உண்மைதாங்க, பார்க்க அப்படி ஒரு அழகை கூட்டித் தருது அந்த மச்சம்.

இந்நிலையில், சீரியலில் குடும்பப்பாங்கினியாக தோன்றும் இவர் தன்னுடைய தொடையழகு பளீச்சென தெரியும் படி குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது .