தற்போது சீரியலில் நடித்து வரும் பல்வேறு நடிகர் நடிகைகள் ஆரம்பத்தில் சினிமாவில் அறிமுகமானவர்கள் தான். பல்வேறு முன்னணி நடிகர்களின் படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகைகள் கூட தற்போது சீரியலில் நடித்து வருகிறார்கள். இந்த பட்டியலில் நடிகை ஸ்வேதா பண்டேகரும் அடங்குவார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், ’சந்திரலேகா’ என்ற தொடரில் சந்திரா என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான்.சென்னையில் உள்ள பி.எம்.ஆர் கல்லூரியில் பொறியியல் படிப்பை படித்த ஸ்வேதா ஆரம்பத்தில் ஒரு சில விளம்பர படங்களில் நடித்து வந்தார்.

அழகான தோற்றத்தினால் பின்னர் இவருக்கு, சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. 2007 -ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ’ஆழ்வார்’ திரைப்படத்தில் அவரின் தங்கையாக நடித்திருந்தார் ஸ்வேதா.

முதல் படமே அஜித் படம் என்பதால், அடுத்த படத்திலேயே இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2008-ஆம் ஆண்டு சத்யா நடிப்பில் வெளியான ’வள்ளுவன் வாசுகி’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ’மறுமலர்ச்சி’ படத்தை இயக்கிய பாரதி தான் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

ஆனால் இந்தப் படம் எதிர் பார்த்த வெற்றியை தராததால், அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதமானது.

இதனால் கிடைத்த வாய்ப்புகளை நிராகரிக்காமல், துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் ஸ்வேதா. இதுவரை 9 திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்வேதா, இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘பூலோகம்’ படத்திலும் நடித்திருந்தார்.

எதிர்பார்த்த வெற்றியை சினிமா கொடுக்கவில்லை என்றாலும், சின்னத்திரை நன்றாகவே கை கொடுத்தது. பிரபல சோப், நெய் விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் இவர் இணையத்தில் கவர்ச்சி குயினாக வலம் வருகிறார்.