கேரளாவில் உள்ள பள்ளிக்கூடத்தில் விளையாட்டாக துளை ஒன்றில் காலை விட்ட மாணவியை பாம்பு கடித்ததில் அவர் பரிதாபமாக உ யி ரி ழந்துள்ளார்.வயநாடு அருகே சுல்தான் பதேரியில் சர்வஜனா என்ற தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஷாஹலா ஷெரின் (8) என்ற சிறுமி ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் நேற்று வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். பிற்பகல் 3 மணியளவில் வகுப்பறைக்குள் மாணவி ஷெரின் அமர்ந்திருந்தார்.

அப்போது அறையின் சுவற்றில் உள்ள ஓரத்தில் இருந்த துளை ஒன்றில் விளையாட்டாக தனது காலை விட்டுள்ளார்.  அப்போது காலில் ஏதோ கடிப்பது போன்று உணர்ந்துள்ளார். உடனே காலை வெளியே எடுத்து பார்க்கையில் காயம்பட்டு ர த்  தம் வருவதைக் கண்டுள்ளார். இதுபற்றி சக மாணவிகளிடம் ஷெரின் கூறியுள்ளார். அவர்கள் வகுப்பாசிரியரிடம் தகவல் தெரிவித்தனர். இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் கூறப்பட்ட நிலையில்

அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் அறிவுரையின் பேரில், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாணவி ஷெரினை அழைத்துச் சென்றனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி ஷெரின் உ யி ரி ழந்தார். இந்த சம்பவம் ஷெரின் பெற்றோர் மற்றும் அவர் படித்த பள்ளிக்கூடத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு அ தி ர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You missed