விஜய் சேதுபதி நடிப்பில் தெலுங்கில் சில மாதங்களுக்கு முன் வெளியான திரைப்படம் உப்பெண்ணா. இதில் கதாநாயகியாக நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார், 17 வயது இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி.

வசீகரமான அழகும், அசத்தலான நடிப்பும் இருந்தாலும் முதல் படத்தோடு காணாமல் போன ஹீரோயின்களின் பட்டியல் மிக நீளம். அப்படியிருக்க வெகு சில நடிகைகள் மட்டுமே முதல் படத்தில் கிடைத்த வெற்றியை தக்க வைத்துக் கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடுகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதம் தெலுங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு பெற்ற திரைப்படம் ‘உப்பெனா’. இந்த படத்தை அறிமுகங்களை கலவை என குறிப்பிடலாம்.

காரணம் இயக்குநர் பிச்சி பாபு சனா, ஹீரோ வைஷ்ணவ் தேஜ், ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி என அனைவருக்குமே இது முதல் படம். இதில் கீர்த்தி ஷெட்டியின் தந்தையாகவும், சாதிவெறி பிடித்த பெரிய மனிதனாகவும் விஜய்சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார்.

ரொமான்ஸ் காட்சிகளில் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டியின் நடிப்பு ரசிகர்களை ஈர்த்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது லிங்குசாமி இயக்கி வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் தனுஷ் படத்திலும் நடிக்க கமிட்டாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு படத்திற்கு சுமார் ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.இந்தநிலையில் தற்போது படுக்கையில் அழகாக படுத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துவருகிறார்.

error: Content is protected !!