இன்று ஏராளமானோருக்கு சைனஸ் பிரச்சனை உள்ளது. ஆனால் பலருக்கும் நமக்கு இருப்பது சைனஸ் என்று சரியாக தெரிவதில்லை. பொதுவாக சைனஸ் பிரச்சனையை, சாதாரண சளி, இருமல் போலவே சரியாக கவனிக்காமல் விட்டு விடுவார்கள்.
சிலர் சாதாரண சளி, இருமலுக்கு உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளை எடுப்பார்கள். ஆனால் சைனஸ் பிரச்சனை பொதுவாக சந்திக்கும் சளி பிரச்சனையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ஒவ்வொரு வருடமும் சைனஸ் பிரச்சனையால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
சில சமயங்களில் சைனஸ் பிரச்சனையால் காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டலாம். சில சமயங்களில் பார்வை பிரச்சனைகளை கூட சந்திக்க நேரிடலாம்.
இந்த வீடியோவில் சைனஸ் பிரச்சனை ஒருவருக்கு தீவிரமாக இருந்தால் வெளிப்படும் சில அறிகுறிகள் மற்றும் அதை சரிசெய்யும் சில வைத்தியங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்போம் வாருங்கள்…