‘8 தோட்டாக்கள்’ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அபர்ணா முரளி. இதனைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷுடன் ‘சர்வம் தாள மயம்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது, சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
‘இறுதிச் சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று படத்தின் டீஸர் மட்டும் வெளியாகி தற்போது வரை மாஸ் பண்ணிக்கொண்டிருக்கிறது. அபர்ணா பாலமுரளி, சூர்யா நடிக்கும், இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கும் அபர்ணா முரளி எவ்வளவு கவர்ச்சியாக போட்டோஷூட் செய்துள்ளார் என்பது தெரியுமா ? இவர் முன்பே ஜிவி பிரகாஷுடன் சர்வம் தாள மயம் என்கிற படத்தில் நடித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல். இந்த படத்தின் டீசரில் சூர்யா தனது சொந்தக் குரலில் பாடியுள்ள ஊர்க்குருவி பருந்தாகுது பாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த திரைப்படத்தின் டீசரில் அடக்க ஒடுக்கமான பொன்னாக நடித்திருக்கும் இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் பரவிவருகிறது.இதைப்பார்த்த ரசிகர்கள் இவரா இப்படின்னு வாயைப்பிளந்துள்ளார்.