முன்பெல்லாம் சீரியல் பிரபலங்கள் பலர் தங்கள் ரசிகர் வட்டத்தை பெரிதாக்கக் காரணம் அவர்களது யதார்த்தமான நடிப்பு தான். ஆனால், தற்போது அதையும் தாண்டி சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதும் அவசியமாகிறது.
இந்த லிஸ்டில் ஸ்ருதி சண்முக பிரியாவும் அடங்குவார். தன்னோட காலேஜ் படிக்கும் நேரத்தில் படிப்பையும் படித்துக்கொண்டு சீரியலிலும் நடித்துக்கொண்டு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய இவர் முதல் சீரியல் ஆன நாதஸ்வரம் சீரியலில் ராகினி கேரக்டரில் ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டார்.
இந்த சீரியலை தொடர்ந்து இவர் பொண்ணுஞ்சல், வாணி ராணி பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு டாப்பர் டூப்பர் ஆக அமைந்தது நாதஸ்வரம் தான். இந்த லாக்கவுட் டைம்ல இவர் ஆன்லைனில் படித்துக் கொண்டிருந்தாராம்.
அதனால் இவருக்கு அந்த நேரம் எளிதாக கடந்து விட்டதாக இருந்தாலும் சூட்டிங்கிற்காக இப்போ வெளியே வருவது கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது.இவர் இப்ப நடித்துக்கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் இவருக்கு ரொம்பவே பிடித்ததாக இருக்கிறதாம்.
இந்த சீரியலில் கண்ணம்மா வாக நடித்துக் கொண்டிருப்பவர் நிஜ வாழ்க்கையிலும் இதே போல தான் அமைதியாக இருப்பார் சூட்டிங் டைமில் மட்டும் இல்லாமல் எப்பவுமே அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பாராம் ஆனால் சில நேரங்களில் நல்ல ஜாலியாக வடிவேலுவின் காமெடியை சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பாராம் ஸ்ருதி சண்முக ப்ரியா.
இப்படிசீரியலில் புடவை சகிதமாக குடும்பப்பாங்கினியாக வளம் வந்து கொண்டிருந்த ஸ்ருதி சண்முக ப்ரியா தற்போது நீச்சல் உடையில் இருக்கும்புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.