காமெடி நடிகர் சுமன் ஷெட்டி நடிகர் ஜெயம் ரவி அறிமுகமான ஜெயம்படத்தில் அவரது தோழனாக நடித்தன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, குத்து மற்றும் 7ஜி ரெயின்போ காலனி போன்ற படங்களில் நடித்து பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

விஷாலின் சண்டக்கோழி, அஜித்தின் வரலாறு, தனுஷின் படிக்காதவன் போன்ற படங்களில் முக்கியமான கதா பாதிரங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம் வெளியான விளம்பரம் என்ற படத்துடன் சேர்த்து மொத்தம் 14 தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இவர் பிறவியிலேயே பெரிய பணக்காரர். ஐதராபாத்தில் உள்ள உள்ள ஒரு பணக்கார வீட்டில் தான் இவர் பிறந்தார். இருந்தாலும், இவர் பேசும் ஸ்லாங் மற்றும் பாடி ஸ்டைல் இவரை சினிமாவுக்கு கொண்டு வந்தது.

கடந்த 2009-ம் ஆண்டு நாக பவானி என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர் 2015-ம் ஆண்டு “சொம்பு சின்ன சத்தியம்” என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார்.தொடர்ந்து தெலுங்கு படங்களில் காமெடியன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இதோ உங்கள் பார்வைக்கு.

error: Content is protected !!