சில வருடங்களுக்கு முன்னாடி டிக்டாக் எப்படி ஃபேமஸ்-ஒ அதேபோல்தான் டப்ஸ்மாஷ் என்று ஒன்று இருந்தது. அந்த டப்ஸ்மாஷ் மூலம் அழகான முகபாவனைகளைக் காட்டி, வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளிவிட்டவர் மிரிணாளினி ரவி.
இந்த வீடியோக்கள் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக சமூக வாலைத்தளங்களில் பல லைக்குகளை அள்ளியவர். தற்போது திரைப்படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பையும் அள்ளினார்.
ஆனால் இவர் Super Deluxe படத்தின் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த நிலையில் கடந்த வருடம் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன் படத்தில் நடித்து இருந்தார்.
இப்படத்தைத் தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார். அதன் பின் தெலுங்கு படமான வால்மீகி படத்தில் அதர்வா ஜோடியாக நடித்திருந்தார், இந்த படம் நம்ம ஊரு ஜிகர்தண்டா படத்தின் ரீமேக் ஆகும்.
தற்போது, இணையத்தில் வைரலாக போய்க்கொண்டிருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் இவர்தான் அடுத்த விஷால் படத்தின் ஹீரோயின். தற்போது ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் இருந்து, செம்ம சூடான புகைப்படம், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.