விஜயின் பிகில் படம் வசூல் ரீதியில் மிக பெரிய வெற்றியை கொடுத்ததோடு, அதில் வரும் பல கதாத்திரங்களும், கதையம்சங்களும் இன்றும் மக்களிடையே பேசப்பட்டு வருகிறது . அதை தொடர்ந்து அவரது 64 படமான மாஸ்டர்  பொங்கல் விருந்தாக அமையுமென எதிர் பார்க்கப்படுகிறது. மாஸ்டர் படத்தை கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இயக்கியுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அ சுரன் திரைப்படமும் விமர்சன ரீதியிலும் சரி, வசூல் ரீதியிலும் சரி பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது வெற்றிமாறன் தனது அடுத்த படத்திற்கு ரெடியாகி வருகிறார்.

யாரும் எதிர்பார்க்காத விஷயம் என்ன வென்றால் விஜய் 65 படத்தில் விஜயும், வெற்றிமாறனும்    இணைய இருக்கின்றார்கள் என்ற தகவல். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அந்த செய்திகளை பார்க்கும் விஜய் ரசிகர்களுக்கு சந்தோசம் ஒரு புறம் இருந்தாலும், மற்றொரு புறம் பெரும் ஆச்சர்யமாக இருக்கிறது.

விஜயை பெரும்பாலும் கமர்சியல் ஆங்கில்களில் மட்டுமே ரசிகர்கள் பார்த்திருக்கின்றனர். வெற்றிமாறன் கதை என்பது கமர்சியல் படங்களாக இருந்தாலும் அதனை தாண்டிய ஆழமான வித்தியாசங்களை கொண்டிருக்கும். இப்பொது விஜய் வெற்றிமாறனோடு இணைந்தால். அ சுரன், வடசென்னை போன்ற படங்களில் வருவது போலான ஒரு கதாபாத்திரத்தில் விஜய் எப்படி இருக்க போகிறார் என்ற வியப்புகள் தான் தற்போது விஜய் ரசிகர்களிடையே உலவி வருகிறது.