தமிழ் சினிமாவில் புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் 1991ல் பிரபல நடிகையாக அறிமுகமானவர் நடிகை சுகன்யா. இதையடுத்து பிரபல நடிகர்கள் படத்தில் கமிட்டாகி நடித்து வந்தார். தற்போது வரை குணச்சித்திர கதாபாத்திரத்தில் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்தும் வருகிறார்.

2002ல் அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதரன் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்தார். திருமணமாகி ஓராண்டிலேயே கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி விவாகரத்து பெற்றார். தற்போது குழந்தையும் இல்லாமல் தனிமையில் குடும்பத்தாருடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் அயோத்தி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டு விழாவை பிரதமர் துவங்கி வைத்தார். 200 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு தொலைக்காட்சிகளில் நேரலை ஒளிபரப்பப்பட்டது.

நடிகை சுகன்யா ராமர் பக்தியை வெளிப்படுத்தும் வண்ணம் அவரது நெற்றியில் ராமரின் திருவுருவத்தை வரைந்துள்ளார். அது டேட்டூவாக இருக்குமா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். தற்போது அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.