தொகுப்பாளினி திவ்யதர்ஷினி நீண்ட காலமாக தனது திருமணத்தை தள்ளிப்போட்டு, ஒரு வழியாக கடந்த 2014 ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்தார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீண்டகாலம் நீடிக்கவில்லை. இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றனர்.

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து செல்வார்.

நிகழ்ச்சி தொகுப்பு மட்டுமல்லாது திரைப்படங்களிலும் சிறு சிறு வேடங்களிலில் நடித்து வருகிறார். நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் சில கதாபாத்திரங்கள் செய்துள்ளார்.

அதை எல்லாம் கடந்து, தற்போது, கருப்பு மாடர்ன் உடை அணிந்து செம்ம modern ஆக BMW காரில் ஹாயாக போஸ் கொடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இன்னிக்கிதா எங்களுக்கு தீனி போட்டு இருக்கீங்கன்னு சொல்லாமல் சொல்கிறார்கள்.