குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும்படி நாட்டு மருத்துவத்தில் சேர்க்கப்படுவது திரிகடுகு சூரணமாகும்.
சுக்கு, மிளகு மற்றும் அரிசிதிப்பிலி ஆகிய மூன்றும் சேர்ந்ததே திரிகடுகு சூரணம் எனப்படுகிறது. இவை அஜீரணக் கோளாறுக்கான மருந்துகளில் முதன்மையான மருந்தாக சேர்க்கப்படுகின்றன.
திரிகடுகு சூரணத்தை தேன் அல்லது வெந்நீருடன் சேர்த்துச் சாப்பிட்டால், உடல் வலி மற்றும் செரிமானக் கோளாறால் ஏற்படும் தலைவலி ஆகியவற்றை குணப்படுத்தும்.
இந்த சூரணம் நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல பிரச்சனைகளை தீர்க்கவல்லது. நெஞ்சு சளி, ஜலதோஷத்தை நீக்கும்.
நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல உறுப்புகளின் செயல்திறனை கூட்டும். இம்மண்டல பலவீனத்தை போக்கும் வல்லமை வாய்ந்தது.
நுரையீரலின் உயிர் சக்தியை அதிகப்படுத்தும். கபம் சார்ந்த பிரச்சனைகளை போக்கும். இன உறுப்புகளின் கோளாறுகளை நீக்கும்.
சித்த மருத்துவத்தில் ஆண்களின் விந்தடைப்பு பிரச்சனைக்கும் திரிகடுக சூரணத்தை பயன்படுத்துகின்றனர்.
செரிமான சுரப்பி, வயிற்றில் சுரக்கும் நொதி கோளாறுகள் என எந்த விதமான பிரச்சனைகளாக இருந்தாலும் சரி செய்து விடும்.
வலிகளை போக்கும் மருந்துகளில், இந்த மருந்தை பல வகையான வலி நிவாரண மூலிகை மருந்துகளோடு சேர்ப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும், திப்பிலி இருமல், இரைப்பு, தொண்டைப்புண், தொண்டைக் கட்டு இவற்றைக் குணமாக்கும். காது, மூக்கு சம்பந்தப்பட்ட கப நோய்களையும் போக்கும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
கிராம்பு, சிறு நாகப்பூ, கூகைநீர் மற்றும் ஏலக்காய் சேர்த்து ஏலாதி சூரணம் செய்யப்படுகிறது. பித்தவாயு, எலும்புருக்கி, தோல் நோய்கள், வயிற்றில் ஏற்படும் மந்தநிலை மற்றும் வயிற்று எரிச்சலை இது சரிப்படுத்தும்.
சுக்கு, மிளகு, திப்பிலி இம்மூன்றும் கொண்டு மருத்துவம் செய்யப்படுகிறது. பழங்கால மருத்துவ வகையில் இவை பெருமளவில் பயன்படுத்தப்பட்ட மூலிகைகளில் ஒன்று.
தற்போது மலைவாழ் மக்கள் பயன்பாட்டில் உள்ளது என்றாலும், சித்தா, ஆயுர்வேதா மருந்துகள் தயாரிக்க இவற்றைப் பெருமளவில் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.