பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை நடிகரும், தயாரிப்பாளருமான மனோபாலா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகத்தையே இன்று ஒட்டு மொத்த சோகத்தில் ஆழ்த்திய செய்தி என்றால், கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் செய்தி தான், ஏனெனில் அவரின் உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

இதனால் அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் அவரின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், பிரபல திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான மனோபாலா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எ.ஸ்.பிபியின் புகைப்படத்தை பதிவிட்டு, அண்ணா வாங்க…வாங்க என்று குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!