ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் அதிகம் நடித்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் தெலுங்கு சினிமாவில் பிரபலமானபின் தான் தமிழ் சினிமாவுக்கு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபல முன்னணி நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் நடிப்பு, இசை என அனைத்திலும் ஆர்வம் கொண்டவர். தமிழில் அஜீத், விஜய் போன்றோருடன் ஜோடி போட்டுள்ளார்.

இடையில் வெளிநாட்டு காதலர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருந்ததால் சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். ஆனால் சில காரணங்களால் அந்த காதல் கைகூடவில்லை.

இதனால் மீண்டும் தற்போது சினிமாவில் கவனம் செலுத்தியுள்ள ஸ்ருதிஹாசன் தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் எனும் படத்தில் நடித்துள்ளார். டிரைலர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுபோக இழந்த தன்னுடைய சினிமா மார்க்கெட்டை மீண்டும் பிடிப்பதற்காக ஹிந்தி சினிமாவில் இளம் நடிகர்களுடன் படுக்கையறை காட்சி மற்றும் உதட்டோடு உதடு முத்தம் காட்சிகளில் நடித்து சூட்டை கிளப்பி உள்ளார்.

தளபதி விஜய்யின் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வால் உடன் நெருங்கிய ரொமான்ஸ் காட்சிகளில் நடித்துள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

error: Content is protected !!