தொட்டாசிணுங்கி இந்த தாவரத்தைப் பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். இந்த செடியில் உள்ள இலைகளை தொட்டால் அவை அப்படியே சுருங்கி விடும். அதைப் பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும். சிறு பிள்ளைகள் விளையாடும் அந்த செடியில் பல மருத்துவ குணங்கள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?
தொட்டாற்சுருங்கி, தொட்டால் வாடி, இலச்சகி, நமஸ்காரி, காமவர்த்தினி என இந்தத் தாவரத்துக்கு பல பெயர்கள் உண்டு.

புண்கள் குறைய:
தொட்டாற்சுருங்கி இலையை உரலில் இடித்து அதை பிழிந்து சாறு எடுத்து, குழி புண்ணில் இட்டு அதன்மேல் ஒரு வெற்றிலையை வைத்து வெள்ளைத்துணியால் கட்டுப்போட்டு வர குழிப்புண் போன்ற புண்கள் விரைவில் குணமாகும்.
வயிற்று கடுப்பு குறைய:
தொட்டாற் சிணுங்கி இலையை எடுத்து அதை வெண்ணெய் போல் நன்கு அரைத்து, அதனுடன் தயிர் கலந்து குடித்து வந்தால் வயிற்றுக் கடுப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

சர்க்கரை நோய் குறைய:
தொட்டாற் சுருங்கி இலை மற்றும் வேர் இவை இரண்டையும் காய வைத்து, பொடி செய்து பாலில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர சர்க்கரை நோய் குறையும்.
உடல் குளிர்ச்சியாக:
தொட்டால் சிணுங்கி இலை ஒரு பிடி எடுத்து அதனை நைசாக அரைத்து எலுமிச்சையளவு எடுத்து மோரில் கலந்து தொடர்ந்து மூன்று நாள் சாப்பிட உடல் குளிர்ச்சியாகும்.

சிறுநீர் எரிச்சல் குறைய:
தொட்டால் சிணுங்கி இலையை அரைத்து அதில் 10 கிராம் எடுத்து, காலையில் தயிருடன் கலந்து சாப்பிட சிறுநீர் எரிச்சல் குறையும்.
வாத வீக்கம் குறைய:
தொட்டால் சிணுங்கி இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கம் குறையும்.
தேமல் சரியாக:
தொட்டாற்சுருங்கி இலையை இடித்து சாரெடுத்து தேமல் உள்ள இடங்களில் பூசிவர தேமல் குறையும்.

வயிற்றுக்கடுப்பு:
ஒரு கைப்பிடியளவு தொட்டாசிணுங்கி இலையை எடுத்து நன்றாக அரைத்து ஒரு குவளை தயிறுடன் கலந்து காலை உணவிற்கு முன் பருக வேண்டும்.
மூலச்சூடு குறைய:
தொட்டால் சிணுங்கி வேரையும், இலையையும் சம அளவில் எடுத்து இடித்து உலர்த்தி துணியில் சலித்து பசும்பாலில் கலந்து குடிக்க மூலச்சூடு குறையும்.

மூல நோய் குறைய:
தொட்டாற் சுருங்கி இலை, நொச்சி இலை, எட்டி மர விதை, படிகாரம், வேப்பெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், தேன் மெழுகு ஆகியவற்றை களிம்பு பதத்தில் ஒன்றாக சேர்த்து அரைத்து மூலம் உள்ள பகுதியில் பூசி வந்தால் மூல முளை குறையும்.