குஷி படத்தில் விஜய்யின் நண்பனாக அறிமுகமான ஷாம் அதன்பிறகு 12B எனும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.
அதன்பிறகு தொடர்ந்து ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, பாலா, லேசா லேசா, இயற்கை, உள்ளம் கேட்குமே, ஏபிசிடி போன்ற படங்களில் நடித்தார். இதில் லேசா லேசா மற்றும் இயற்கை ஆகிய படங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றது.
அதன்பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிரபலமான நடிகராக வலம்வந்தார். ஒரு கட்டத்தில் மிகவும் கட்டுக்கோப்பான உடல் அமைப்பு கொண்ட நடிகர் என்றால் இவரைத்தான் அழைப்பார்கள்.

ஹீரோவாக மார்க்கெட் இழந்த பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் இரண்டாவது ஹீரோ கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். தன்னுடைய உடலை வருத்தி 6 எனும் படத்தில் நடித்தார்.
அந்த படத்திற்கு மிகப்பெரிய விமர்சன வரவேற்பு இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாக வெற்றி பெற முடியவில்லை. சமீபத்தில் சூ தா ட்ட புகா ரில் மாற்றி தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார்.

ஆனால் சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியில், சும்மா சீட்டு விளையாடிக் கொண்டிருந்ததை யாரோ சூ தா ட்டம் நடத்துகிறார்கள் என்று பொய் தகவல் கொடுத்ததால் போ லீசார் வந்ததாக தெரிவித்தார்.
மேலும் காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்து போட்டுவிட்டு அடுத்த ஐந்து நிமிடத்திலேயே வீட்டுக்கு வந்துவிட்டோம் எனவும் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் மிகவும் பிட்டான நடிகராக வலம் வந்த ஷ்யாம் தற்போது உடல் எடை கூடி தொப்பையும் தொந்தியுமாக காட்சியளிக்கிறார்.