தொப்பையே வராமல் இருக்க நேபாள மக்கள் கையாளும் ரகசியம்… இதைத்தான் இவர்கள் சாப்பிடுகிறார்களாம்!

உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தில் ஆயுர்வேதம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலும் ஆயுர்வேதத்தில் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உள்ளது. சிறப்பான வழியில் நோய்களை குணப்படுத்தக்கூடிய பல்லாயிரக்கணக்கான மூலிகைகள் ஆயுர்வேதத்தில் பொதிந்து உள்ளன. அவற்றுள் ஒரு முக்கிய மூலிகை கடுகுரோகிணி. இமாலய மலைகளில் காணப்படும் மூலிகையான இது சற்று கசப்பாகவே இருக்குமாம். இது பல நோய்களிலிலிருந்து உங்களது உடலைப் பாதுகாக்கின்றது. இதன் பயன்களைத் தற்போது காணலாம்.

எடை குறைப்பு

உடல்பருமன், எடையைக் குறைக்க இந்த மூலிகை பெரிதும் உதவியாக இருக்கின்றது. இந்த மூலிகையில் இருந்து எடுக்கப்படும் சாறு செரிமானத்திற்கு உதவி, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனால் உடலின் தேவையற்ற கொழுப்புகள் விலகி எடை அதிகரிப்பைத் தடுக்கின்றது.

சுவாசப் பிரச்சினை

இன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு மாசுக்களால் சுவாசிப்பதில் கூட சிரமம் ஏற்படுகின்றது. இதனால் சைனஸ், ஆஸ்மா போன்ற நோய்கள் தொற்றிக்கொள்வதுடன், சுவாசிப்பதற்கும் சிரமத்தினை மேற்கொண்டு வருகின்றோம்.

கடுகுரோகிணியில் இயற்கையாகவே அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், மூக்கடைப்பு ஏற்படுவது குறைகிறது, சுவாசப் பாதையில் உள்ள அடைப்பு திறக்கப்பட்டு மாசுபடுத்திகளை வெளியேற்றுகிறது. ஆஸ்துமா நோயாளிகளைப் பொறுத்தவரை, இது அவர்களின் உடலில் நிலைமையை மோசமாக்கும் ஹிஸ்டமைனைக் கட்டுப்படுத்துவதால் மிகவும் நன்மையை ஏற்படுத்துகின்றது.

உடல் வெப்பநிலை

பொதுவாக காய்ச்சல் என்றால் மருந்து, மாத்திரைகளை உட்கொள்வதையே வழக்கமாக வைத்திருக்கிறோம். ஆனால் அதற்கு பதிலாக இந்த கடுகுரோகிணி மூலிகை உட்கொண்டால், உடல் வெப்பத்தினை தணிப்பது மட்டுமின்றி, அதனால் ஏற்படும் அழற்சியையும் தடுக்கின்றது. மேலும் பருவநிலை மாற்றத்தினை எதிர்த்து போராடுவது மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கின்றது.

குணமாகும் காயம்

உடம்பில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் அதன் மஞ்சள் போடுவதை வழக்கமாக பலர் வைத்திருப்பார்கள். மஞ்சளைப் போன்று இந்த மூலிகையினையும் காயத்தில் மீது போட்டால் உடனடியாக காயம் குணமாகுமாம். சில ஆய்வுகள் இந்த மூலிகை விட்டிலிகோ மற்றும் சொரியாசிஸ் போன்ற பாதிப்புகளைக் கூட திறம்பட போக்குகிறது என்று கூறுகின்றன.

கல்லீரல் பிரச்சினை

கடுகுரோகிணியில் ‘குட்கின்’ அல்லது ‘பிக்ரோலிவ்’ என்சைம் உள்ளது, இது கல்லீரல் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது மற்றும் பித்த கோளாறுகள் போன்ற சிக்கல்களைத் தடுக்கிறது. மேலும் இது கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்க அவற்றை சுத்தப்படுத்துகிறது. இது கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதிக்கும் கிருமித் தாக்குதலைத் தடுக்கிறது.

 

error: Content is protected !!