பிரேமம் மலர் டீச்சர்க்கு அப்புறம் அதிகபிரபலமா இருப்பது நம்ம பவி டீச்சர் தான். யூடியூப்பில் ஒளிபரப்பாகி வந்த வெப் சீரிஸ் ஆஹா கல்யாணம். இந்த் தொடர் தொலைக்காட்சியில் வெளியாகும் மெகா சீரியல்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு வைரலாகியுள்ளது.
இந்த தொடரில் பவி டீச்சராக நடித்து வரும் பிரிகிதா தான் இணையத்தின் இப்போதய பேமஸ். இப்படி ஒரு அத்தை மகள் நமக்கு இல்லையே என இளைஞர்கள் வருத்தப்பட்டும் அளவுக்கு இருக்கிறார் பிரிகிதா.
பவியின் ஒவ்வொரு அசைவையும் நம்ம மீம்ஸ் கிரியேட்டர்ஸ், மீம்ஸுகள் ஆக்கி கலக்கி கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக 90ஸ் கிட்ஸ் மீம்ஸ்களில் அதிகமாக இடம்பெறுவது பவி டீச்சர் தான்.
மாஸ்டர் படத்தில் கூட முக்கிய கேரக்டரில் பிரிகிடா நடித்துள்ளதாக தகவல் உள்ளது. தற்போது லாக் டவுன் என்பதால், நல்ல Weight போட்டு செம்ம கட்டையாக புடவையில் பட்டாசாக போஸ் கொடுத்துள்ளார் நம்ம பவி டீச்சர்.