நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் இவர் நடித்த விக்டர் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

 

அதனை தொடர்ந்து இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி தான்.

சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான தடம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது.

அதனை தொடர்ந்து கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாஃபியா திரைப்படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

இந்நிலையில் இவர் நடித்து வந்த சினம் திரைப்படத்தின் டப்பிங் பணிக்காக புதிய கெட்டப்-ல் வந்துள்ளார்.

தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகி இது இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ள திரைப்படத்திற்கான கெட்டப்-ஆ பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

.

You missed