நடிகர் வைகைப் புயல் வடிவேலு வெப்சிரீஸுக்கு வருவதாக தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அவர் நடிக்க இருக்கும் காமெடி தொடர் பரபரப்பாகத் தயாராகி வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு ஹீரோவாக நடிக்கும் காமெடி படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்த படம் சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட வேண்டியது என்றும் நடிகர் வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் விதித்துள்ள தடை காரணமாக, தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் வடிவேலு இல்லாமல் வேறு நடிகரை வைத்து படத்தை அவர் இயக்க இருப்பதாகக் கூறப்பட்டது.

ஆனால் அவர் அப்போது, இதை மறுத்திருந்தார். ‘வடிவேலுக்காகத்தான் காத்திருக்கிறேன். வேறு யாரையும் வைத்து இந்தப் படத்தை இயக்கவில்லை.

விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் வடிவேலு நடிப்பில் வெப்சீரிஸை சுராஜ் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இதுபற்றி இயக்குனர் சுராஜ் உண்மைதான் என்று கூறியுள்ளார். படத்துக்காக உருவாக்கப்பட்ட கதையை வெப்சிரீஸுக்காக மாற்றுகிறோம்.

மொத்தம் ஒன்பது எபிசோடுகள். மற்ற நடிகர், நடிகைகள் இன்னும் முடிவாகவில்லை. இப்போது ஸ்கிர்ப்ட் வேலை போய் கொண்டிருக்கிறது.

அமேசான் பிரைமில் வெளியாகிறதா? ஹாட் ஸ்டாரா என்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வைரலானதினை தொடர்ந்து ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

error: Content is protected !!