தமிழ் சினிமாவில் வந்த பல நடிகைகளில் ஒரு சில நடிகைகள் மட்டுமே உடையில் கவர்ச்சி காட்டாமல் தன்னுடைய அங்க அசைவுகளில் ரசிகர்களை கட்டிப் போட்டுவிடும் வித்தை தெரிந்தவர்கள். அதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியவர் சினேகா.

பெரும்பாலும் கிளாமர் உடைகளை அணியாமல் தன்னுடைய கண்கள் மற்றும் உடல் அசைவுகளால் மட்டுமே ரசிகர்களுக்குள் காமத்தீ பற்றிக் கொள்ளுமளவுக்கு பர்பாமன்ஸ் கொடுப்பவர்.

பல கமர்ஷியல் படங்களுக்கு முன்னணி நாயகியாக ஒரு காலத்தில் பரிசீலிக்கப்பட்ட சினேகா தான். சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவான சிவாஜி படத்திலேயே முதலில் சினேகாதான் பேசப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் தன்னுடைய வெற்றியை நிலைநாட்டினார் சினேகா. பின்னர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி ஆன சினேகா, தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தெலுங்கில் மூத்த நடிகராக வலம் வரும் பாலகிருஷ்ணன் என்பவருக்கு ஜோடியாக அவரின் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளாராம். 38 வயதான சினேகா 61 வயதான பாலகிருஷ்ணாவுக்கு ஜோடி போடுவதை ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.

இருந்தாலும் சினேகா தனது செகண்ட் இன்னிங்சை ஆரம்பித்து விட்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே திருமணத்திற்கு பின்னும் ரசிகர் கூட்டம் அப்படியே இருக்கும் என்பதற்கு சினேகா ஒரு எடுத்துக்காட்டு.

சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசே ஆகல மேடம் என்று கூறி வருகிறார்கள்.