கொரனா வைரஸ் ஒட்டுமொத்த உலகநாடுகளையும் நிலைகுலைய வைத்துள்ளது. நாளுக்கு, நாள் அதிகரிக்கும் கொரனா வைரஸின் தாக்கம் நம் இந்தியாவிலும் கடும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, மதுரையில் கொரனா தொற்று உச்சத்தில் இருக்கிறது. இதனால் அங்குமட்டும் லாக்டவுண் தொடர்கிறது.இப்படியான சூழலில் சென்னையில் கரோனா நாளுக்கு நாள் கூடியே வருகிறது.

பேருந்துசேவையும் இன்றுமுதல் தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் ஊரடங்கு தொடரும் நிலையில் வீட்டுக்குள் இருக்கும் மக்களுக்கு மருந்து, உணவு என எந்த அடிப்படைவசதியும் செய்யாததாக முதல்வருக்கு இளம்பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் அழுதுகொண்டே பேசுவது கல் நெஞ்சையும் கரைப்பதுபோல் உள்ளது. குறித்த அந்த வீடியோவில், ‘என் பெயர் லெட்சுமி..நான் அம்பத்தூர், பாடி பகுதியில் இருந்து பேசுகிறேன். நான் கரோனா நோயாளி. நாலுநாளைக்கு முன்னாடி எனக்குத் தீவிரமா சளிபிடிச்சு இருந்துச்சு.தொண்டைவலியும் இருந்ததால பிரைவேட் லேப்ல டெஸ்ட் பண்ணுணேன்.

எனக்கு பாசிட்டிவ்ன்னு வந்துச்சு. கார்ப்பரேசனுக்கும், மெடிக்கல் அசோசியேசனுக்கும் அதோட காப்பி வாட்ஸ் அப் பண்னிருகாங்க. மருந்து வரும்ன்னு சொன்னாங்க. ஆனா ஆஸ்பிட்டல் கூட்டிப் போகவோ, மருந்துதரவோ இதுவரை இல்லை. பயங்கரமா தலைவலிக்குது. ஆனா இதுவரை மெடிசன்கூட கொடுக்கலை. கார்ப்பரேசனோ, கவர்மெண்டோ இதுவரை போன்கால்கூட பண்ணல.

நைட்லாம் தலைவலியால் கஷ்டபடுறேன். மெடிக்கல் ஸ்டோர் போனா மாத்திரைத் தரல. மார்னிங்காச்சும் வீட்டுக்கு கார்ப்பரேசன்ல இருந்து வருவாங்கன்னு பார்த்தேன். அப்பவும் வரல. என் வீட்டுக்காரரையும், அத்தையையும் கூட்டிட்டு போயிட்டாங்க. இங்க எனக்கு சாப்பாடு கொடுக்கக்கூட ஆள் இல்லை.என்னை மெடிக்கல் ஷாப்காச்சும் விடுங்க…என வேதனையோடு பேசும் வீடியோ நம் மனதை வாட்டுகிறது.