மலையாள படங்களில் நடித்து வந்த இனியா, ‘வாகை சூடவா’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சற்குணம் இயக்கிய அந்தப் படத்தில் விமல் ஹீரோவாக நடித்திருந்தார்.

முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் ‘அம்மாவின் கைப்பேசி’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘மெளனகுரு’, ‘புலிவால்’ போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.

திறமையாக நடித்தாலும் இனியாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காவில்லை, தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போனார் இனியா. இறுதியாக இவர் பரத்துடன் பொட்டு என்ற படத்தில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் பாடசாலை என்ற துக்கடா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அதன் பின்னர் வந்த வாகை சூடவா படம் இனியாவுக்கு ஒரு நல்ல வரவேற்பு அமைந்தது.வழக்கமாக மலையாள நாயகிகள் வந்த புதிதிலேயே தமிழ் சினிமாவின் உச்சத்திற்கு சென்றுவிடுவார்கள்.

ஆனால், தளுக்கு மொழுக்கு என வாட்ட சாட்டமாக இருக்கும் இனியாவுக்கு அப்படியே நேர் எதிராக அமைந்து விட்டது.படத்திற்கு படம் தனது மட்டமான கதை தேர்வினால் தமிழ் சினிமாவில் நிலைக்க முடியாமல் போனார்.

இருந்தாலும் அவ்வப்போது தமிழ் மலையாளம் சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். தற்போது, பிரபல தனியார் நிறுவனத்தின் துணி கடை ஒன்றின் பிராண்ட் அம்பாசிட்டராக பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ள இனியா மிகவும் இறுக்கமாக ஸ்போர்ட்ஸ் ப்ரா, லெக்கின்ஸ் சகிதமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கிறங்கி போய் தான் உள்ளனர். நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? என்று குழம்பி போயுள்ளனர் சில நெட்டிசன்கள்.