பிரபலமான ரியாலிட்டி ஷோ, பிக் பாஸ் தமிழ் சீசன் 4 அதன் பிரமாண்டமான துவக்கத்திலிருந்து 50 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை இரண்டு வைல்டு கார்டு என்ட்ரி நடந்து அதில் ஒருதர் எலிமிநெட் செய்யப்பட்டார்.

தற்போது வரை இதில் ரேகா, சுரேஷ் சக்ரவர்த்தி, வேல்முருகன் மற்றும் சுசித்ரா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த வார நாமினேஷன் இல் மொத்தம் 7 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சோம், பாலாஜி, ஆரி, ஜீத்தன் ரமேஷ், சம்யுக்தா, சனம் ஷெட்டி மற்றும் நிஷா ஆகியார் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் தற்போது தமிழகத்தில் குறிப்பாக சென்னை மற்றும் கடலோர பகுதிகளில் நிவர் புயலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மழை மற்றும் வெள்ளம் என மொத்த சென்னையும் தத்தளித்து வருகிறது.

தொடர்ந்து மழை அதிகமாக பெய்து வருவதாலும் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதாலும் பிக் பாஸ் வீட்டில் நீர் சூழ்ந்துள்ளது.இதனால் பிக் பாஸ் வீட்டில் இருந்த அனைவரும் ஆள விடுங்கடா சாமி என கதறியுள்ளனர்.இதனால் தற்போது அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்ட பின்பு போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே அனுப்பிவைக்க படுவார்கள் என தெரிகிறது.மேலும் இன்றும் நாளையும் ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பாகும் என அறியபப்டுகிறது.

error: Content is protected !!