இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்றவர்களைவிட வெற்றி பெறுபவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் சுரேஷ். அவர் இரண்டு வாரங்களாக மிக அமைதியானதால்… அவர் மீது மக்களுக்கு ஒருவிதமான அதிருப்தி இவரை வெளியேற்றும் நிலைக்கு கொண்டு சென்றது.
பிக்பாஸ் வீட்டில் எப்பொழுதும் சாப்பிடவும், வழக்கமாக தூங்குவதையும் தவிர வேறு எதையும் செய்யாத கிணற்றில் போட்ட கல்லாக ஒரு சில போட்டியாளர்கள் இன்னும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் மத்தியில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல கண்டெண்ட் கொடுத்து கொண்டிருந்த சுரேஷ் தற்பொழுது வெளியேறியது பார்பவர்களுக்கே மிக அதிர்ச்சியாக இருந்தாலும், மீண்டும் இவர் வயல் கார்டாக ரீ-என்ட்ரி கொடுக்க மாட்டாரா என்றகிஆசையையும் பலர் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும், பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து அவ்வப்போது தன்னுடைய கருத்துக்களை சுரேஷ் சமூக வலைத்தளங்களின் வழியாக கொடுத்து வருகிறார். அந்த வகையில் சுரேஷ் நேற்று நிஷாவுக்கு ஒரு ரகிசயத்தை விளக்கினார்.
அதில் பிக்பாஸ் விளையாட்டு என்றால் என்ன? என்பதையும், அவர் ஏன் இன்னொருவரை சார்ந்து அருமையாக விளையாடுகிறார் என்பதையும் பிக்பாஸ் கமல்ஹாசன் புரிய வைத்தார். நான் யாரையும் சார்ந்து விளையாடவில்லை என்று கூறி வந்த நிஷாவிற்கு கமலின் பேச்சு சாட்டையடியாகவே பார்க்கப்பட்டது.