நம் முகத்தை அழகுப்படுத்த இந்த பேக்கிங் சோடா உதவுகிறது. இதை அடிக்கடி இப்படி செய்து வருவதால் நம் முகத்தில் இருக்கும் அழுக்குகள், கரும்புள்ளிகளை நீக்குகிறது.
தேவையான பொருட்கள்:
1 தேக்கரண்டி பேக்கிங் சோடா
1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
இவை இரண்டையும் வைத்து நம் முகத்தை பராமரிக்கலாம்.
செய்முறை:
பேக்கிங் சோடா மற்றும் தண்ணீரை பேஸ்டில் கலக்கி முகத்தில் முகப்பரு மற்றும் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.
தடவிய பிறகு மூன்று நிமிடங்கள் கழித்த பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். பேக்கிங் சோடாவில் பாக்டீரியா எதிர்ப்பு பொருள் உள்ளது.
செய்முறை:
மேலும் பேக்கிங் சோடா, எலுமிச்சை சாற்றை நன்கு பேஸ்டில் கலக்கிய பிறகு அதை முகத்தில் கறைகள் உள்ள இடத்தில் பூசவும்.
பிறகு அதை மசாஜ் செய்து 2 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். சோடா மற்றும் எலுமிச்சை சாறு இவை இரண்டுமே வெளுக்கும் பண்புகள் நிறைந்தவை. இவை இறந்த சரும செல்களை அகற்றுகிறது.
பேக்கிங் சோடா மற்றும் ரோஸ் வாட்டரை பேஸ்டில் கலக்கிய பிறகு அதைமுகத்தில் தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு நீரில் கழுவ வேண்டும். இதை தினமும் செய்துவருவதால் நம் முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்குகிறது.
பேக்கிங் சோடா மற்றும் ரோஸ் வாட்டர் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்கி பளபளப்பாகவும் வைத்திருக்கிறது.