தமிழில் ‘கற்க கசடற’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ராய் லட்சுமி பின்னர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார்.

தமிழில் அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது. இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. இதையடுத்து பாலிவுட் பக்கம் சென்றுவிட்டதால் கொஞ்சம் நெஞ்சம் இருந்தும் மார்க்கெட்டையும் மொத்தமாக இழந்துவிட்டார்.

தற்போது சிண்ட்ரல்லா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிக்பாஸ் ரைசா வில்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்ககளில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதனால், பட வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்தார். ஆனால், வந்துள்ளதோ வெப் சீரிஸ் வாய்ப்பு. ஆம், ஹிந்தியில் வெளியாகி தாறு மாறு ஹிட் அடித்த பாய்சன் என்ற வெப்சீரிஸின் இரண்டாம் பாகமான “பாய்சன் 2”-வில் நடிக்கவுள்ளார் ராய்லக்ஷ்மி. நடிகைகள், பிகினி, நீச்சல் குள காட்சிகள், லிப்-லாக் என்றாலே படத்தில் நடிக்க யோசிப்பார்கள்.

ஆனால், ராய் லக்ஷமி இந்த மூன்றையும் ஒரே வெப் சீரிஸில் செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறார். நீச்சல் குளத்தில் பிகினி உடையில் லிப்-லாக் காட்சிகள் என அனல் பறக்கும் கவ ர்ச்சியை காட்ட ஆயத்தமாகி வருகிறார் ராய் லக்ஷ்மி. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கின்றது.