ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பணியை ஆரம்பித்து அதன் பிறகு சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து தற்பொழுது வெள்ளித்திரையிலும் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக நமது ப்ரியா பவானி சங்கர் அவர்கள் திகழ்கிறார்.

அந்த வகையில் இவர் வெள்ளித் திரையில் முதன் முதலாக நடித்த திரைப்படம் தான் மேயாதமான். இத்திரைப்படத்தில் தான் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு கார்த்திக் அவர்களுடன் கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

அந்த வகையில் தற்போது நடிகை பிரியா பவானி சங்கர் அவர்கள் உலகநாயகன் கமலஹாசன் அவர்களது நடிப்பில் தற்போது தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் நடிகர் அதர்வாவுடன் ஒரு திரைப்படமும், ஹரிஷ் கல்யாண் அவர்களுடனும் ஒரு திரைப்படமும் நடித்த தற்பொழுது தமிழ் திரை உலகில் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

அடிக்கடி தன்னுடைய சமூக வலைத்தளங்களில் ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வரும் ப்ரியா பவானி சங்கர் அவர்கள் தற்போது ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் துபாயில் எடுக்கப்பட்டது.

ஐபிஎல் பார்ப்பதற்கு துபாய் சென்ற நடிகை பிரியா பவானி அங்கே உள்ள நட்சத்திர ஓட்டலில் நீச்சல் குளத்தில் ஒரு சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதோ அவர் பதிவிட்டிருந்த புகைப்படங்கள்.

error: Content is protected !!