நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்தும் முட்டையில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளன தெரியுமா...?

நாம் சாப்பிடும் உணவுப்பொருள்கள் பாதுகாப்பாக இருக்கும் என நினைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கிறோம். நாம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் சில உணவுகள் நஞ்சாக மாறிவிடுகின்றது. மேலும் ஒரு காலத்தில் குளிர்சாதனப் பெட்டி ஆடம்பர தேவையாக இருந்தது.

ஆனால் இப்பொழுது மக்களின் அத்தியாவசிய தேவையாக மாறி விட்டது. இன்று நாம் மீதியுள்ள உணவுகளை பாதுகாக்க குளிர்சாதனப் பெட்டியை அதிகம் பயன்படுத்துகின்றோம்.

நாம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாப்பிடும் உணவுப் பொருட்கள் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் வைத்து சாப்பிடும் உணவுகள் ஆரோக்கியமானவை அல்ல.

நம் வீட்டில் நாம் எப்போதும் ஒரு டஜன் முட்டையை வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது வழக்கம் ஆனால் முட்டைகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாப்பிடக் கூடாது. அவை உடலுக்கு நல்லது இல்லை.

மேலும் முட்டைகளில் பாக்டீரியா தொற்று உண்டாகிவிடும் வாய்ப்பு உள்ளது. இதை சாப்பிடுவதால் குறிப்பாக வயிற்றிற்கு கேடு உண்டாகும். பக்டீரியாக்கள் முட்டைகளின் ஓடுகளில் உருவாகும்.

அதுமட்டுமின்றி கோழி முட்டையிடும் போது அதன் ஓடுகளில் சால்மோனெல்லா பக்டீரியாக்கள் உருவாவது இயல்பான ஒரு விஷயம்.

மேலும் பக்டீரியாக்கள் உள்ள முட்டைகளை நாம் வாங்கியவுடன் நாம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கிறோம்.

அப்படி வைப்பதால் சால்மோனெல்லா என்ற பக்டீரியா வளருவதற்கு தேவையான தட்ப வெப்பநிலை குளிர்சாதனப் பெட்டி தருகிறது.

மேலும் குளிர்ந்த ஈரப்பதம் உடைய தட்ப வெப்ப நிலையில் சால்மோனெல்லா பாக்டீரியா பலமடங்கு பெருகச் செய்கிறது.

மேலும் இந்த பாக்டிரியாக்கள் சாதாரண அறைவெப்பத்தில் அதாவது (37டிகிரி) யில் இவை இனப்பெருக்கம் செய்ய முடியாது. அவை இறந்துவிடுகின்றன.

மேலும் இந்த பக்டீரியாக்கள் சாதரண வெப்ப நிலையில் உயிர் வாழ்வதில்லை. அதிக ஈரப்பதம் கொண்ட குளிர் நிலையில் தான் இவை இனப்பெருக்கம் செய்கின்றன.

குளிர்சாதனப் பெட்டியில் உணவுப்பொருள்களை வைத்து சாப்பிடுவதால் நம் குடல் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் தாக்கும் வாய்ப்பு உள்ளது.

இனி நாம் முட்டையை குளிர் சாதனப் பெட்டிகளில் வைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை நம் உடலுக்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.